சாண்டல்வுட் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் மரணமடைந்தார். மாரடைப்பு ஏற்பட்ட உடனேயே, 46 வயதான புனித் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது மறைவையடுத்து கர்நாடகம் முழுவதும் இரங்கல் அலை வீசுகிறது. மாநிலத்தில் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
ரசிகர்களைக் கட்டுப்படுத்த பல பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் புனித் ராஜ்குமார் அவரின் தந்தை ராஜ்குமார் தென்னிந்திய சினிமாவின் அடையாளமாக இருந்தார். கன்னடத் திரையுலகில் தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற முதல் நடிகர்.
கன்னட சூப்பர் ஸ்டாருக்கு சமூகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல நடிகர்கள் மற்றும் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



