ரஜினியின் அண்ணாத்த படத்தை இணையதளங்களில் வெளியிட தடை !

சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது

மேலும் இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.சமீபத்தில் வெளியான அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரல் காற்றே’, ’மருதாணி’, ‘வா சாமி’ ஆகிய பாடல்களும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகின.

மேலும் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.அண்ணாத்த படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்கக் கோரி, சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில் அண்ணாத்த படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.