தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.தற்போது நவ 4 தீபாவளி பண்டிகை. புதுச்சேரி, காரைக்கால் அடுத்த வாரம் முழுக்க விடுமுறையைப் பள்ளிகள் அறிவித்துள்ளன.
மேலும் நவ 8-ம் தேதி முதல் பள்ளிகள் முழுமையாக இயங்க உள்ளன என புதுவை அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு தெரிவித்தது,நவம்பர் 2-ம் தேதி கல்லறை தினம் வருவதால் அன்றும், 3, 4-ம் தேதிகள் தீபாவளியையொட்டியும் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் தீபாவளிக்குப் பிறகு வெள்ளி, சனிக்கிழமைகளில் வகுப்புகள் இருக்கும்.



