தமிழகத்தில் விரைவில் தொடங்குகிறது 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை !

tn-news-schools-and-colleges-holiday-in-kanyakumari
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.தொற்று பரவல் காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜூன் மூன்றாவது வாரத்தில் 11 ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கான வகுப்புகளை துவக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிட்ட பாடப் பிரிவிற்கு பதினோராம் வகுப்பில் சேர அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் முந்தைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 கேள்விகளுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து பதிலளிக்க கூடிய வகையில் நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடி வகுப்பா அல்லது ஆன்லைன் வழியில் வகுப்புகளை துவக்க வேண்டுமா என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை.