இந்தியாவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராமம் !

Booster vaccine
இன்று முதல் செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசி

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில்,ஜம்மு காஷ்மீரின் பண்டிப்போரா மாவட்டத்தில் தொலைதூர மலைப்பகுதியில் உள்ளது வேயான் என்ற கிராமத்தில் 100 சதவீதம் பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பண்டிப்போரா மருத்துவ அதிகாரி மஸ்ராத் இக்பால் கூறும்போது,18 வயதுக்கு மேற்பட்ட 100 சதவீதம் பேருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்தி முடித்தோம்.12 வாரங்களுக்குப் பிறகு கிராமத்தில் தங்கியுள்ளவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.