தமிழ் மொழி கோவின் இணையதளத்தில் சேர்க்கப்பட்டது !

இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி போடப்பட்டுள்ள விவரங்களை அறிந்து கொள்வதற்கும் மத்திய அரசு சார்பில் கோவின் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.இதில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதில் இந்திய மொழிகளான மராத்தி, மலையாளம், பஞ்சாப், தெலுங்கு, குஜராத்தி, அசாமி, வங்காளம், கன்னடா, ஒடியா ஆகியவை இடம்பெற்றிருந்தன.தமிழ் மொழி மட்டும் புறக்கணிக்க பட்டிருந்தது.கோவின் இணையதள பக்கத்தில் தமிழ் மொழி சேர்க்கப்படவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், கோவின் இணையதளத்தில் இன்று தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. கோவின் இணையதளத்தில் மொத்தம் 12 மொழிகள் இடம்பெற்றுள்ளன