schools closed in puducherry : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது புதுச்சேரியில் நாளை முதல் மறு அறிவிப்பு வரை 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.schools closed in puducherry
கோவிட் 19 வழக்குகளின் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருவதால் புதுவையில் 1 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு ஆஃப்லைன் வகுப்புகளை நடத்தும் அனைத்து பள்ளிகளும் திங்கள்கிழமை முதல் மூடப்படும்.
இந்த வகுப்புகளுக்கு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கும் என்று உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : அடர்த்தியாக முடி வளர்க்க ஆசையா !



