actor Vishnu Vishal tests covid positive : நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று !

actor Vishnu Vishal tests covid positive : நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று

actor vishnu Vishal tests covid positive : தமிழ் சினிமாவில் நடிகராக உள்ளவர் விஷ்ணு விஷால்.வெண்ணிலா கபடி குழு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.இதனை தொடர்ந்து குள்ளநரி கூட்டம்,ஜீவா,ராட்சசன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனாவின் இந்த மூன்றாவது அலையானது திரைப்பட உலகில் மிக வேகமாக செயல்பட ஆரம்பித்துள்ளது.தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, விஷால் தத்லானி, ஸ்வரா பாஸ்கர் போன்றவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.actor Vishnu Vishal tests covid positive

நடிகர் விஷ்ணு விஷால் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது,ஆம் நான் கோவிட் பாசிட்டிவ் என்று நடிகர் எழுதியுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் யாராவது என்னுடன் தொடர்பு கொண்டால், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். பயங்கரமான உடல்வலி மற்றும் மூக்கில் இரத்தம். லேசான காய்ச்சலும் உள்ளது. விரைவில் திரும்பி வருவேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : TN news : முழு ஊரடங்கில் பயணிகள் தவிப்பு !