வரும் 26ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

கோவிட் 2வது அலையால் நாடு முழுவதும் நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஒரு சில மாநிலங்கள் விரைவில் பள்ளிகளை திறக்க உள்ளதாக அறிவித்து வருகின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் ஆக., 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநில அரசு, ‘குஜராத்தில் நேற்று புதிதாக 36 பேருக்கு மட்டுமே கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது 370 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பு குறைந்து உள்ளதால், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்1 வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 26ம் -தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். 50 சதவீத மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரலாம். பள்ளிக்கு வரவிரும்பும் மாணவர்கள், தங்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்’ என, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.