தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

Tn news: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தினந்தோறும் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.