இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு !

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் தொற்று எண்ணிக்கை அதிகம் பரவியது.கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் ஒன்றிய அரசு தனி தனியே ஊரடங்கை அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைந்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 483 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றின் மீட்பு விகிதம் 97 சதவீதத்திற்கும் மேலாக முன்னேறியுள்ளது.தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.12 சதவிகிதமாக உள்ளது.இந்தியாவில் இதுவரை 42,34,17,030 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.