இங்கிலாந்தில் மார்ச் 8-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

மார்ச் 8-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

இதனையடுத்து அங்கு பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் என வைரஸ் தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தும் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் 4 அம்ச திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.

இதனிடையே வரும் 29ஆம் தேதி பிரிட்டன் நாடாளுமன்ற உரையில் போரிஸ் ஜான்சன் நிறைய அறிவிப்புகளை அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.