இன்று ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை வெகுவமர்சையாகக் கொண்டாட அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலைக்கு கட்சி ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்க உள்ளனர். அதன்பின்னர் அம்மா நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா சிறப்பு மலரை அவர்கள் இருவரும் வெளியிட உள்ளனர்.