நீட் நுழைவுத் தேர்வு கட்டணம் உயர்வு

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, பட்டியலின பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் முன்னர் ரூ.2,750 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு கட்டணம் ரூ. 3,750 இல் இருந்து, தற்போது ரூ.5,015 ஆக உயரத்தப்பட்டுளள்து. நீட் தேர்வுக்கான ஜிஎஸ்டி வரியாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.