நம் நாட்டில் எஸ்பிஐ வங்கி பயனாளர்கள் அதிக அளவில் இருப்பார்கள். இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
எஸ்.பி.ஐ BSBD வங்கி கணக்குகளில் ஏடிஎம் அல்லது கிளைகளில் இருந்து மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண முறை நாளை முதல் அமலாகிறது.
மேலும் 5-வது பரிவர்த்தனை முதல் சேவை கட்டணமாக, 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.மேலும் 10 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகத்தை பெற 40 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். 25 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகம் தேவைப்பட்டால் 75 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.



