புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி, புதிய கார்டுக்கு ஒப்புதல் தரும் சேவையும் நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷனில் கடைகளில் நாளை முதல் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி, புதிய கார்டுக்கு ஒப்புதல் தரும் சேவையும் நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அரசால் ரூ.4000 இரு தவணைகளில் ரூ.2000 வீதம் மே 21 மற்றும் ஜீன் 21 மாதங்களில் வழங்க ஆணையிடப்பட்டது. மேலும் ஜீன்’ 21 மாதத்தில் நிவாரணத் தொகை ரூ.2000/-உடன் மளிகைப் பொருட்கள் வழங்கவும் 14 ஆணையிடப்பட்டது.
இதனைப் பெற நியாய விலை கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத் தொகை மற்றும் தொகுப்பு பையினையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.



