இனி ATM-ல் பணம் எடுக்க டெபிட் கார்டு தேவை இல்லை

எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது ஆண்ட்ராய்டு தொலைபேசியில் உள்ள SBI YONO செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால், கார்டு இல்லாமலேயே பணத்தை எடுக்க முடியும் என அவ்வங்கி தெரிவித்துள்ளது.

முதலில் இந்த செயலியை பயன்படுத்த எஸ்பிஐ ஆன் லைன் பேங்கிங் லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி, யோனோ செயலியில் உள்நுழைய முடியும். அதன்பிறகு, தனது கணக்கின் 6 இலக்க MPIN அமைக்கலாம்.

பின்பு எஸ்பிஐ ஏடிஎம்மில், ‘கார்டு-இல்லாத பரிவர்த்தனை’ (Card-Less Transaction) ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும், பின்னர் யோனோ கேஷுக்கு சென்று விவரங்களை உள்ளிட வேண்டும். எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அருகிலுள்ள யோனோ காஷ் பாயிண்டுகளை யோனோ செயலிய் மூலம் கண்டறியலாம்.