நலமுடன் உள்ளார் சசிகலா- விக்டோரியா மருத்துவமனை

வி.கே.சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாகவும், ஆக்ஸிஜன் உதவி இன்றி சுவாசிப்பதாகவும் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் (BMCRI) தெரிவித்துள்ளது.

இது குறித்து விக்டோரியா மருத்துவமனை (Victoria Hospital) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., “அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது.

அவர் நான்காவது நாளாக ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியின்றி இயல்பாக சுவாசித்து வருகிறார். சசிகலாவின் உடலில் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை இயல்பான அளவிலே உள்ளது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.