பில்லி ,சூனியம் ,தடைகள் உடைய வணங்குங்கள் பிரத்யங்கிரா தேவி -அய்யாவாடி !

பிரத்தியங்கிரா தேவி சக்தியின் வடிவமாகக் கருதப்படும் பெண் தெய்வம்.இந்த தேவி உக்கிரமான தெய்வம் ஆகும்.இந்த தெய்வத்தின் முகம் பார்க்க சிங்கம் போலவும் உடலமைப்பு பெண் போலவும் இருக்கும்.

இந்த கோவிலில் இருக்கும் பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.

இந்த கோவிலில் பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் யாகம் ஒவ்வொரு அமாவாசையன்றும் சிறப்பாக நடத்தப்படுகிறது.மனதில் தைரியம் பிறக்க,பில்லி,சூனியம்,தொல்லை இருந்து விடுபட இந்த தேவியை சென்று தரிசியுங்கள்.

இந்த கோவில் கும்பகோணத்திருந்து 6 km தொலைவில் உள்ள திருநாகேஸ்வரம் பக்கத்தில் உள்ள அய்யாவாடி என்ற ஊரில் உள்ளது.மேலும் இந்த ஊருக்கு பேருந்துகள் கும்பகோணத்திருந்து இருக்கின்றது.