‘லாபம்’ படம் எப்போது வெளியாகும்?

பன்னாட்டு நிறுவனங்கள் நம் நில வளத்தையும், நீர் வளத்தையும் எவ்வாறு அழிக்கின்றன என்கின்ற கருத்தை அடிப்படையாக வைத்து ‘லாபம்’ படத்தை இயக்கி உள்ளார் எஸ்.பி.ஜனநாதன்.

இந்த திரைப்படத்தில் இமான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடி சமீபத்தில் வெளியான ‘யாழா யாழா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய்சேதுபதி வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் ;லாபம்’ திரைப்படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ திரைப்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுத்து விட்டார் என்றும் வருகின்ற ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரும் என்றும் தயாரிப்பு நிறுவனமான 7சிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் அறிவித்துள்ளது.