இன்றைய பெட்ரோல் விலை

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றமும் இன்றி ரூ.86.45 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து 22வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாதது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.