உலக நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அனுப்பும் பணி தீவிரமாக செயல்படுகிறது !

இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சிரம் இன்ஸ்டியூட் தயாரித்த கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியாவில் கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் மியான்மர், பூடான், சிஷெல்ஸ், நேபாளம் உள்பட அண்டை நாடுகளுக்கும் இந்த மருந்து அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் பிரேசில் நாட்டுக்கு கடந்த வாரம் 20லட்சம் டோஸ் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

சவுதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவும் தங்களுக்கு தடுப்பூசி வேண்டும் என்று இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து சவுதி அரேபியாவுக்கு 30 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்துள்ளார்