டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் நடந்த கலவரம் !

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டெல்லி மாநில எல்லையில் 60 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கும் போராடும் விவசாயிகளுக்கும் இடையில் 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்தநிலையில், வரும் குடியரசு தினத்தன்று லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று போராடும் விவசாயிகள் தெரிவித்தினர். ஆனால், டெல்லி காவல்துறை சார்பில் விவசாயிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் பங்கேற்கும் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று போராடும் விவசாயிகள் தெரிவித்தினர். ஆனால், டெல்லி காவல்துறை சார்பில் விவசாயிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.இன்று காலை விவசாயிகள் போராட்டக்களத்திலிருந்து டெல்லிக்குள் டிராக்டர் மூலம் நுழையத் தொடங்கினர். டெல்லி, ஹரியானா கர்னல் பகுதியில் கூட்டம் கூடியது.

அவர்களை தடுக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை விவசாயிகள் மீது வீசினர். தடுப்புகளை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் தடுப்புகளை அடித்து உடைத்தனர். அதனால், டெல்லியில் பதற்றம் நிலவியது.