சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார் சசிகலா.மேலும் அவருக்கு கரோனா பாதிப்பு மற்றும் உடல்நிலை குறைபாடு இருந்ததால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது,கரோனா சிகிச்சை பெற்று வந்த சசிகலா குணமடைந்து நலமுடன் இருப்பதால் அவரை நாளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று பெங்களூரு விக்டோரிய மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் சில நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கொள்ள வேண்டும்.இன்றுடன் அவருக்கு 10 நாட்கள் சிகிச்சை நிறைவு பெற்றது. அவருக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்று மருத்துவமனை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



