சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து சசிகலா கடந்த 27 ஆம் தேதி வெளியானார்.மேலும் அவர் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிக்சை தொடர்ந்து வருகிறது.
சசிகலாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால் மேலும் அவருக்கு தேவையான இன்சுலின் வழங்கப்படுவதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர் 4வது நாளாக செயற்கை சுவாசம் இன்றி அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.



