உங்களுக்கு இரத்தத்தின் அளவு குறைவாக இருந்தால் தினமும் சப்போட்டா பழம் அல்லது ஜூஸ் சாப்பிடுங்கள் சீக்கிரமே உடலில் இரத்த அளவு ஏறிவிடும்.மேலும் இதில் குளுக்கோஸ் அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக ஆற்றலை விரைவில் தரக்கூடியது.

சப்போட்டாவில் புரதசத்து, கொழுப்பு, கால்சியம் , பாஸ்பரஸ் , இரும்புச்சத்து , வைட்டமின் அதிகம் உள்ளன.இதை தினமும் உட்கொண்டால் எலும்புகளுக்கு மற்றும் உடலுக்கு மிகவும் நல்லது.

சிலருக்கு பித்தம் இருப்பதால் அடிக்கடி தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதனை நீக்க சப்போட்டா பழத்தை சாப்பிட்டு பின்னர் ஒரு ஸ்பூன் சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் நீங்கும்.

சப்போட்டா ஜூஸ் , வெயில் காலத்தில் சாப்பிடும் பொது உடல் சூட்டை குறைக்கும், தாகத்தையும் தணிக்கும்.மற்றும் இரத்தத்தில் சக்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் இதை பழத்தை தவிர்ப்பது நல்லது ஏனென்றால் இதில் இனிப்பு அதிகமாக இருக்கும்.



