கேசவ் தேசிராஜு சென்னையில் காலமானார்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் மத்திய சுகாதார துறை செயலளருமான கேசவ் தேசிராஜா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

முன்னாள் மத்திய சுகாதார துறை செயலாளர் கேசவ் தேசிராஜா இதய கோளாறு காரணமாக ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. சென்னையில் பிறந்த கேசவ் தேசிராஜா, தொடக்க கல்வியை டேராடூனிலும், உயர்கல்வியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

முன்னாள் மத்திய சுகாதார துறை செயலாளர் கேசவ் தேசிராஜா இதய கோளாறு காரணமாக ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. சென்னையில் பிறந்த கேசவ் தேசிராஜா, தொடக்க கல்வியை டேராடூனிலும், உயர்கல்வியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். இந்திய குடிமையியல் தேர்வில் தேர்ச்சி பெற்ற கேசவ், மத்திய சுகாதார துறை செயலாளராக பதவி வகித்துள்ளார். மனநல சுகாதார சட்டம் கொண்டு வருவதற்கு காரணமாகவும், மன சுகாதார திட்ட நிலை குழுவில் கேசவ் தேசிராஜா உறுப்பினராக இருந்துள்ளார். அடையாறு புற்றுநோய் மையத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக இருக்கிறார்.

2018ல் இவர் எழுதிய இந்திய சுகாதார அமைப்பின் ஊழல் எனும் புத்தகம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது போல கர்நாடக இசையில் நாட்டம் கொண்ட கேசவ் தேசிராஜா எழுதிய எம்.எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு புத்தகம் பலத்த வரவேற்பை பெற்றுள்ள புத்தகம் ஆகும்.