இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று !

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.மேலும் அவருடன் 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பி. அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் ஆகியோரை தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.இது குறித்து பிசிசிஐ அமைப்பின் செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிவிப்பில்,இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.மேலும் அவருடன் பயணித்த 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மற்ற வீரர்கள் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது.தில் யாருக்கும் கரோனா இல்லை எனத் தெரியவந்துள்ளது.