தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு வருமா !

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.ஒரு வருட காலத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டன.மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.

செப் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதனை தொடர்ந்து 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தொடங்கப்பட்ட 2 நாட்களில் சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சில ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதியாகின.மேலும் கொரோனா,நிபா போன்ற வைரஸ் ஒருபக்கம் அச்சம் ஏற்படுத்திவருகிறது.மேலும் தமிழகத்தில் முழு ஊரடங்கு வருமா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.