சனிப்பெயர்ச்சி முன்னிட்டை திருநள்ளாறில் சிறப்பு பூஜை

சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இன்று (டிசம்பர் 27) அதிகாலை 5.22 மணிக்கு இடம் பெயர்ந்தார். சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம் பெயர்ச்சி செய்வார். அதன்படி 2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது சனி பகாவன் இடம் பெயர்ச்சி செய்துள்ளார்.

சனிப்பெயர்ச்சி முன்னிட்டை காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற சனிபகவான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு குறிப்பிட்ட அளவிலான பக்கதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.