கல்யாணம் ஆகாமலும் வகிட்டில் குங்குமம் வைக்கலாம்- சனம் ஷெட்டி

எப்போது சேலை கட்டினாலும் வகிட்டில் குங்குமம் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சனம் ஷெட்டி.

இதனால் அவருக்கு திருமணம் ஆகி விட்டதோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதை ட்விட்டரிலும் ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு பதிலளித்த சனம், ஹாஹா..பலர் இந்த கேள்வியை கேட்கிறார்கள். எனக்கு திருமணமாகவில்லை.

உங்கள் ஆசியுடன் ஒரு நாள் நடக்கலாம். திருமணமான பெண்கள் தான் நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்க வேண்டும் என்ற வழக்கம் எங்கள் வீட்டில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.