பொருளாதார பாதிப்பை மேம்படுத்த உதவுமா இந்த பட்ஜெட் தாக்கல்?

2021-2022ஆம் ஆண்டுக்கான இந்திய பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை மேம்படுத்த இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் பெரிய அளவில் உதவும் என்பதால் மக்கள் மத்தயிலும், நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையில் நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ டெக், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்எம்சிஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடுகல் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகிறது. மற்றவை சற்றே ஏற்றத்தில் காணப்படுகிறது.

இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமில்லாமல் 72.94 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 72.95 ரூபாயாக முடிவடைந்திருந்தது.