ஓடும் பேருந்தில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி

காதல் ஜோடி தற்கொலை முயற்சி

பெங்களூருவிலிருந்து சேலம் நோக்கி நேற்றிரவு வந்த பேருந்து ஒன்றில் இளம்ஜோடி மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். சேலம் கருப்பூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது அவர்களை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்து இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது நடத்திய விசாரணையில், அவர்கள் விழுப்புரத்தை சேர்ந்த ராஜேஷ், காஞ்சிபுரத்தை சேர்ந்த லோகேஸ்வரி என தெரியவந்தது. உறவினர்களான இவர்கள், காதலித்து வந்த நிலையில் எதிர்ப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதும் வேலை கிடைக்காத விரக்தியில் இந்த முடிவை எடுத்ததும் தெரியவந்தது.

இதையும் படிங்க: nilgiri mountain train : ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் !

nilgiri mountain train : நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு ஊட்டி மலை ரயில் பாதையில் சீரமைக்கும் பணி நிறைவடைந்தது. கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி முதல் இந்த மாதம் 21 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் சேவை 60 நாட்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் தொடங்கியது.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் காலை 7:10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது 180 சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.nilgiri mountain train

நீலகிரியில் கடந்த 23 ஆம் தேதி ஹில்குரோவ் மற்றும் அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டது.இந்நிலையில், மீண்டும் மழை தொடர்வதால் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், டிசம்பர் 14-ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது .

ரயில் பாதையில் விழுந்து கிடந்த பாறாங்கற்கள் வெடிவைத்து அகற்றப்பட்டன. ரயில் பாதையில் சரிந்த மண் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டன.. ரயில் பாதையை சீரமைக்கும் பணி நேற்று நிறைவடைந்தது.

இதையும் படிங்க: nilgiri mountain train : ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் !