Free ration supply: இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு

tn news : மக்கள் கவனத்திற்கு..நாளை விடுமுறை கிடையாது !
tn news : மக்கள் கவனத்திற்கு..நாளை விடுமுறை கிடையாது !

Free ration supply: டெல்லியில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு பொருட்களை அடுத்த ஆண்டு மே 31-ம் தேதி வரை வழங்குவதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

டெல்லியில் கொரோனா பெருந்தோற்று ஏற்பட்டத்தில் இருந்து மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் நாங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் 72.77 லட்சம் பேர் பயன்பெறுவர். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் படி புலம்பெயர்ந்த மக்கள், அமைப்புச் சாரா தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு மாதம் 4 கிலோ கோதுமையும், 1 கிலோ அரிசியும் வழங்கப்படும்.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

இதையும் படிங்க: nilgiri mountain train : ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் !