nilgiri mountain train : ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் !

Train accident
ஆந்திரா ஸ்ரீகாகுளத்தில் ரயில் விபத்து

nilgiri mountain train : நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு ஊட்டி மலை ரயில் பாதையில் சீரமைக்கும் பணி நிறைவடைந்தது. கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி முதல் இந்த மாதம் 21 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் சேவை 60 நாட்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் தொடங்கியது.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் காலை 7:10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது 180 சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.nilgiri mountain train

நீலகிரியில் கடந்த 23 ஆம் தேதி ஹில்குரோவ் மற்றும் அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டது.இந்நிலையில், மீண்டும் மழை தொடர்வதால் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், டிசம்பர் 14-ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது .

ரயில் பாதையில் விழுந்து கிடந்த பாறாங்கற்கள் வெடிவைத்து அகற்றப்பட்டன. ரயில் பாதையில் சரிந்த மண் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டன.. ரயில் பாதையை சீரமைக்கும் பணி நேற்று நிறைவடைந்தது.

இதையும் படிங்க :omicron fear : இரவு நேர ஊரடங்கு வருமா !