29 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் !

ரஷ்யாவின் கம்சட்கா நகரில் இருந்து பலானாவுக்கு சென்றுகொண்டிருந்த ரஷ்ய ஏ.என் -26 விமானம் மாயமாகியுள்ளது.ந்த விமானத்தில் விமான பயணிகள் 6 பேர் உட்பட 29 பேர் பயணம் செய்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் தரையிறங்க முயன்றபோது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.

விமானம் கடலில் விழுந்திருக்கக்கூடும் எனவும் சில உள்ளூர் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விமானத்தை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படுள்ளன.