மீண்டும் உயரும் தங்கத்தின் விலை !

தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே இருந்த நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை சில நாட்களாக குறைந்த வண்ணமே உள்ளது.இது மக்களுக்கு சற்று நிம்மதி அளித்தது.ஆனால் தற்போது தங்கத்தின் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.

மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.33,904க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.76 உயர்ந்து ரூ.4,238க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பார் வெள்ளி, 67600.ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இன்று 1100 ரூபாய் உயர்ந்து ரூ.68700க்கு விற்பனையாகிறது ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70க்கு சென்னையில் விற்பனையாகிறது.