மாதவன் நடிப்பில் ராக்கெட்ரி பட ட்ரெய்லர் வெளியானது !

நடிகர் மாதவன் இயக்கி மற்றும் நடித்துள்ள படம் தான் ராக்கெட்ரி நம்பி விளைவு.இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ராக்கெட்ரி நம்பி விளைவு. இந்தப் படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகிறது.

இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாதவனை பேட்டி காண்கிறார் நடிகர் சூர்யா. மேலும் நம்பி நாராயணன் எதிர்கொண்ட சவால்கள், சோதனைகள் உள்ளிட்டவையும் ட்ரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.