மேக்கப் நீக்கும் வழிமுறைகள் தங்களுக்கு தெரியுமா !

பெண்கள் பார்ப்பதற்கு எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.மேக்கப் போடுவதற்கு நேரம் செலவிடுவதை போல மேக்கப் நீக்கும் போதும் சில நேரம் அதற்கென்று எடுக்க வேண்டும்.முக்கியமாக நம் சருமத்திற்கான நம் சில விதிமுறைகளை பின்பற்றித்தான் ஆக
வேண்டும்.

எவ்வளவு தான் மேக்கப் போட்டாலும், இரவில் படுக்கும் முன் அதனை தவறாமல் நீக்கிவிட வேண்டும். இதற்கு வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டே மேக்கப்பை நீக்கலாம்.அதிகம் கெமிக்கல் இல்லாத மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துங்கள்.

மேக்கப் நீக்கின பிறகு இரவு படுக்க செல்லும் முன்பு ஒரு பஞ்சில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்தில் தடவி கொள்ளலாம்.இப்படி செய்வதால் சருமத்திற்கு வறட்சி இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

ஒரு பஞ்சில் பாலை நனைத்து, முகத்தை துடைத்து எடுத்து, சிறிது நேரம் கழித்து, காட்டனை நீரில் நனைத்து துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள மேக்கப் நீக்கப்படுவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

பேபி ஆயில் கொஞ்சம் பஞ்சில் நனைத்து கண்கள் மேக்கப் மற்றும் லிப்ஸ்டிக் போன்றவற்றை நீக்கலாம்.இதனால் சருமத்திற்கு எந்த பிரச்னையும் வராது.