மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகில் வடக்கு வடம்போக்கி தெருவில் வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான பழமையான கட்டிடத்தை புதுப்பிக்க வேலைகள் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் இன்று அந்த கட்டிடத்தில் வேலை நடந்துகொண்டிருக்கும் போது தீடிரென்று இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் 4 பேர் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் இறந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க பட்டுள்ளது.அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



