தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு!

பட்ஜெட் உரையை 1 மணி நேரம் 50 நிமிடத்தில் வாசித்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதே போல அதிக நிதி சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-2021-ம் பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது. நடப்பு பட்ஜெட்டில் அது 12.5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.