வியர்வை நாற்றத்தை போக்க சில டிப்ஸ் !

பொதுவாக நம் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்திற்கு நம் மனம் மற்றும் உடல் இரண்டுமே காரணம்.நம் மனதில் ஏற்படும் அதிக சந்தோசம்,துக்கம் போன்றவை ஏற்படும் பொது மனநிலை கட்டுப்பாட்டை மீறுகிறது.இந்த நேரத்தில் சுரப்பிகள் அதிகமாக சுரக்கும்.இதனால் கூட வியர்வை நாற்றம் வரலாம்.

மேலும் நம் உண்ணும் சில உணவுகள் வெங்காயம்,பூண்டு,கிராம்பு போன்ற உணவுகளால் உடல் திரவத்தினால் வியர்வை நாற்றம் வரலாம்.இதற்கான சில டிப்ஸ்.

முதலில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.இது உள் மற்றும் வெளி ஆரோக்கியத்திற்கு நல்லது.கீரைகள்,ஆரஞ்சு பழம்,அன்னாசிப்பழம் போன்றவற்றை சாப்பிட்டால் உடலில் நார்சத்து அதிகம் கிடைப்பதால் துர்நாற்றம் குறையும்.மேலும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள் சில யோகா பயிற்சிகள் செய்யுங்கள்.

உடல் துர்நாற்றம் போக்க இரவு படுக்க செல்லும் முன்பு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.காட்டன் துணிகளை அதிகம் பயன்படுத்துங்கள்.