அமைச்சர்கள் ராஜினாமா நெருக்கடிகளுக்கு ஆளாகும் மம்தா பானர்ஜி !

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது.அங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றுவருகிறது.

திரிணாமுல் காங்கிரஸுக்கு போட்டியாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தை பா.ஜ.க பிடித்துள்ளது.மேலும் பா.ஜ.கவுக்கு திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவிவருகிறது. மம்தா பானர்ஜி, மோடி, அமித்ஷா கடும் போட்டி நிலவிவருகிறது.

இந்தநிலையில் , திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏராளமான எம்.பி, எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவுக்கு தாவி வருகின்றனர்.கடந்த நவம்பர் மாதம் மாநில போக்குவரத்து அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்தார்.

மேலும் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏக்களும், 1 எம்.பியும் பா.ஜ.கவில் இணைந்தனர். இந்தநிலையில், நேற்று வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி அவரது அமைச்சர் பதவியை ராஜீனாமா செய்துள்ளார்.