ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் ரிலையன்ஸ்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்,” ஜஸ்ட் டயல்” நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை கையகப்படுத்தியுள்ளது.

ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் இருந்து முதல் கட்டமாக 40.95 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்துவதாகவும், அதன்பிறகு ஓஃபன் ஆபர் மூலம் 26 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்த உள்ளதாகவும் ரிலையன்ஸின் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பங்கு கைப்பற்றுதலுக்கு பிறகும் வி.எஸ்.எஸ் மணி ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜஸ்ட் டயல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியளிப்பதாக ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் இயக்குநர் ஈஷா அம்பானி தெரிவித்துள்ளார்.