டேனிஷ் சித்திக் மரணத்திற்கு தாலிபான்கள் காரணமல்ல

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போரை படம்பிடிக்கச் சென்ற இந்தியாவின் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

டேனிஷ் சித்திக்கை தாங்கள் கொல்லவில்லை என தாலிபான் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித், யார் சுட்டதில் அவர் உயிரிழந்தார் என தெரியவில்லை என்றார்.

டேனிஷ் சித்திக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், போர்க் களத்திற்கு வரும் செய்தியாளர்கள், தங்களிடம் தகவல் தெரிவிக்காமல் இருப்பதும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்க காரணம் என்றும் கூறினார்.