தன் ஊழியர்களுக்கு இலவச தடுப்பூசி அளிக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் !

ரிலையன்ஸ் நிறுவனம் ௧௩ லட்சத்திற்கும் கூடுதலான ஊழியர்கள் அவர்களது குடும்பத்தினர் நிறுவனக் கூட்டாளிகள் இவர்களது குடும்பத்தினர் அணைவருக்கும் இலவசத் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இதற்கு ஊழியர்கள் செய்ய வேண்டியது என்னவெனில் Cowin இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு RIL ஆன்லைன் ஹெல்த் கேர் தளமான Jio Healthhub-ல் தங்களது இடத்தை தெரிவு செய்து கொள்ளலாம்.

இந்த தடுப்பூசி ரிலையன்ஸ் மருத்துவமனைகள் மற்றும் 800க்கும் அதிகமான நகரங்களில் உள்ள கூட்டாளி மருத்துவமனைகள், அதாவது அப்போல்லோ, மாக்ஸ், போன்ற மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகள் போடப்படும்.