சக்கப்போடு போடும் ரிலையன்ஸ் நிறுவனம்!!!

நாளுக்கு நாள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உயர்வை சந்தித்து வருகிறது. அதன்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தில் சுமார் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

நாட்டின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் முதலீடு செய்ய சிங்கப்பூரைச் சேர்ந்த ஜி.ஐ.சி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் 1.22 விழுக்காடு பங்குகளை ரூ.5,512.5 கோடி ரூபாய்க்கு வாங்க ஜி.ஐ.சி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த மூன்று நாட்களில் நான்கு நிறுவனங்கள் ரிலையன்ஸின் சில்லரை வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. கரோனா காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் சரிவை சந்திக்கும் நிலையில் , ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் உயர்வை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.