இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மியின் லேப்டாப் !

ரெட்மி இந்தியா தனது முதல் லேப்டாப் தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.சீனாவில் அறிமுக படுத்தப்பட்ட இந்த லேப்டாப் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக இந்தியாவில் ரெட்மிபுக் வரிசையை அறிமுகப்படுத்தியது.

இது இரண்டு வகையாக அறிமுகப்படுத்த பட்டுள்ளது.RedmiBook Pro மற்றும் RedmiBook e-Learning Edition .இது வீட்டிலிருந்து வேலை பார்வையாளர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவர்களை கருத்தில் கொண்டு அறிமுகமாகியுள்ளது.

புதிய Redmibook தொடர் மடிக்கணினிகள் இன்டெல்லின் 11 வது ஜென் டைகர் லேக் செயலிகளால் இயக்கப்படுகின்றன.ரெட்மிபுக் ப்ரோவின் விலை ₹ 49,999. இதை வாங்க விரும்பினால் எச்டிஎஃப்சி வங்கி discount மூலம் 3,500 தள்ளுபடியையும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மிபுக் e-Learning Edition விலை 256 ஜிபி ₹ 41,999. மற்றும் 512 ஜிபி விலை ₹ 44,999. எச்டிஎஃப்சி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ மூலம் வாங்குபவர்களுக்கு 2,500 தள்ளுபடி வழங்குகிறது.