கொரோனா நிவாரண நிதி ரூபாய் 4000 மூன்று மாதங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு வழங்கப்படும் !

cm-mk-stalin-visit-dubai-for-expo-2020
சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை பெரிதும் தாக்கியது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது.இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை ஒட்டி ரூபாய் 4000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.

இரண்டு தவணைகளில் 2000 ரூபாயாக வழங்கப்பட்டு உள்ளது மேலும் 14 வகை மளிகை பொருட்களும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.இது துயரில் இருக்கும் மக்களுக்கு உதவியாக இருந்தது.

இதுவரை கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் வாங்காதவர்கள் இந்த மாதத்திற்குள் வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், ரேஷன் கார்டுகள் அல்லது அடையாள அட்டைகள் இல்லாத மூன்றாம் பாலினத்தவர் நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் இன்னும் மூன்று மாதங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.