பில் கேட்ஸ் தம்பதியின் விவாகரத்து அதிகாரபூர்வமாய் அறிவிக்கப்பட்டது !

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவர் பில் கேட்ஸ். இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவருக்கும் விவாகரத்து இறுதி செய்யப்பட்டு உள்ளது என சி.என்.என். தெரிவித்து உள்ளது.

உலகப் பணக்காரருமான பில் கேட்ஸ் அவரின் மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர்.அவர்கள் தெரிவித்தது,கடந்த 27 ஆண்டுகளில் மூன்று குழந்தைகளை வளர்த்துள்ளோம்.

இதேபோல், உலகம் முழுவதும் பரந்து விரிந்து செயல்படும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி அதனை உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், நலமாகவும் வாழ வழிவகை செய்து வந்திருக்கிறோம்.னால், எங்களது திருமண வாழ்க்கையை இந்த தருணத்தில் முடித்துக் கொள்ள ஒன்றாக முடிவு செய்துள்ளோம்.

இந்த நிலையில்,விவாகரத்துக்கான மனுவை வாஷிங்கடன் நகரில் உள்ள கிங் கவுன்டி சுப்பீரியர் கோர்ட்டில் மெலிண்டா தாக்கல் செய்துள்ளார். தற்போது இருவரின் விவாகரத்து இறுதி செய்யப்பட்டு உள்ளது என சி.என்.என். தெரிவித்து உள்ளது.